இன்று நம்மைச் சுற்றி ஸ்மார்ட் சாதனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஏசிகளில் இருந்து ஸ்மார்ட் வாட்ச்கள் வரை பெரும்பாலான பொருள்கள் ஸ்மார்ட் ஆகிவிட்டது.
இருப்பினும், ஸ்மார்ட் ஷூக்கள் குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தற்போது அதற்கும் ஒரு வழியை திறந்துள்ளது
இக்ஸிகோ
நிறுவனம். நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட் ஷூக்கள் லொகேஷன் டிராக்கர், முன் மற்றும் பின்புற கேமரா, சார்ஜிங் போர்ட் போன்ற அதிரடி அம்சங்களுடன் வருகின்றன. இந்த சிறப்பு ஸ்மார்ட் ஷூக்களை குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வோம்.
இந்தியாவில் தடம் பதித்த ஸ்மார்ட் ஷூக்கள்
பிரபல ஆன்லைன் டிராவல் போர்டலாக வலம் வரும்
Ixigo
குழுமத்தின் தலைமை செயல் அலுவலரும், நிறுவனருமான அலோக் பாஜ்பாய் ட்விட்டரில் இந்த புதிய தயாரிப்பு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இக்ஸிகோ நிறுவனம் ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வீடியோ டீஸர் இந்த ஷூஸ்எக்ஸின் அம்சங்களை விளக்குகிறது.
மலிவு விலை boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் – விலை ரொம்ப கம்மி!
இதற்கு முன் இதுபோன்ற ஸ்மார்ட் ஷூக்கள் தயாரிக்கப்படவில்லை. இந்த நேர்த்தியான
ShoesX
நீர்ப்புகா USB சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உதவுகிறது. இதற்கான பேட்டரி கீழ் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த ஷூக்கள் மூலம் செல்பி எடுக்கலாம். ஷூஸ்எக்ஸ் 12 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலணி கொண்டு செல்பி எடுத்து உங்கள் பயண நினைவுகளை சேமித்து வைக்கலாம். நீங்கள் காலணி கொண்டு செல்பி எடுப்பதும் இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
முன் கேமராவைத் தவிர, இக்ஸிகோவின் ஷூஸ்எக்ஸ் உங்களுக்கு அல்ட்ரா வைட் பின்பக்க கேமராவையும் வழங்குகிறது. இந்த வழியில் நீங்கள் யார் பின்னால் இருக்கிறீர்கள். மேலும், யார் துரத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இதில் ஆண்டி-தெஃப்ட் சென்சார்கள் இருப்பதால், வெளியிடங்களில் காலணிகளை போட்டு விட்டு தைரியமாக சென்று வரலாம். மிக முக்கியமாக கோயில்களுக்கு!
பொழுதுபோக்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் – Samsung அளிக்கும் உறுதிமொழி!
உங்கள் காலணிகளை யார் தொடுகிறார்கள் அல்லது திருடுகிறார்கள் என்பதையும் இது உங்களுக்குத் தெரிவிக்கும். இந்த தகவலை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியின் உதவியுடன் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து, கண்காணிக்கும் அம்சம் உள்ளதால், இது மிகவும் பாதுகாப்பானதாகப் பார்க்கப்படுகிறது.
ஷூஸ்எக்ஸின் பிற அம்சங்கள்
ShoesX ஷூவில் ஒரு முக்கிய சிறப்பம்சம் ஒன்று உள்ளது. ‘Auto Warmer Sole’ உடன் வருகிறது. இது உங்கள் கால்களை -20 டிகிரி குளிரிலும் கூட சூடாக வைத்திருக்கும். இந்த ஷூவில்
QR Code Scanner
இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா. ஆம், இந்த அம்சமும் இதில் உள்ளது. இதன் உதவியுடன் உங்களால் பணம் செலுத்த முடியும். இதற்கு நிறுவனம் Shoe-R Code Scanner என்று பெயரிட்டுள்ளது.
ஆக்டிவிட்டி கண்காணிப்பைப் பொருத்தவரை,
Native Tracking App
ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபயிற்சி, உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் போன்றவற்றை கண்காணிக்க முடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால் ShoesX-ஐ Ixigo பயனர்களால் மட்டுமே வாங்க முடியும்.
இருப்பு இருக்கும் போது மட்டுமே இந்த ஷூவை வாங்க முடியும். ஷூஸ்எக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் அதை வாங்கலாம். இந்த ஸ்மார்ட் ஷூக்களின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நிறுவனம் பதிவு செய்வதற்கான பக்கத்தை மட்டுமே திறந்துள்ளது.
அடுத்த செய்திபிரீமியம் OnePlus போன் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள்!