புதுடெல்லி: சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லை பிரச் னை தீர்ப்பதற்காக இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே நடந்த 15வது சுற்று பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. எல்லை பிரச்னையை சரியாக கையாள சீனாவும், இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.