
2 ஆண்டுகளுக்குப் பின் துவங்கிய ஜிவி.பிரகாஷ் – ரைசா படம்
ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'காதலிக்க யாருமில்லை'. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்த இப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். ஜிவி பிரகாஷே இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, கவுசல்யா, செந்தில், ஆனந்த்ராஜ், குரு சோமசுந்தரம் சாரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். மூணாறில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரைசா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.