பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் ‘Les Propheties’.
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், அவர் இந்த உக்ரைன் ரஷ்யப் போர் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் உருவாகியுள்ள போர், 2023இல் மிகப்பெரிய போராக வெடிக்கலாம் என அவர் கணித்துள்ளதாக கருதப்படுகிறது.
தனது புத்தகத்தில் ‘Seven months the Great War, people dead of evil-doing’ என்ற ஒரு விடயத்தை எழுதியிருகிறார் நாஸ்ட்ரடாமஸ். அதாவது, ஏழு மாதங்களுக்கு ஒரு பெரும் போர் நடைபெறும், அதனால் பலர் கொல்லப்படுவார்கள் என்பது அதன் பொருள்.
இது, உக்ரைன் ரஷ்யப் போரால் அடுத்த ஆண்டு உருவாக இருக்கும் மூன்றாம் உலகப்போரைக் குறிக்கும் ஒரு விடயம் என கருதப்படுகிறது.
இப்போதைக்கு உக்ரைன் போர் முடிவுக்கு வருவதுபோல் தோன்றினாலும், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் பயங்கர அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்தான்.