ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைக்குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு தேச கட்சியினர் இன்று அரிக்கேன் விளக்கை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் `மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது மண்ணெண்ணெயில் எரியும் அரிக்கேன் விளக்கை நாரா லோகேஷ் கையில் ஏந்தியபடி வர, பிற நிர்வாகிகளும் தொண்டர்களும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக முதல்கட்டமாக தலைநகர் அமராவதியில் போராட்டம் நடத்தியுள்ள தெலுங்கு தேசம் கட்சியினர், அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய செய்தி: எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக தற்கொலை முயற்சிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM