உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் தனது விவசாய தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின்நிலைய உதவி மின்பொறியாளர் சக்திவேலை அணுகினார். அதற்கு சக்திவேல் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தந்தால் இலவச மின் இணைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி நேற்று சசிக்குமார், ரூ.30 ஆயிரம் பணத்தை உதவி மின்பொறியாளர் சக்திவேலுவிடம் வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.
