பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இலங்கை அரசை கலைக்க வேண்டும் என்று, ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி கட்சி, இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி, லங்கா சமசமாச கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகித்த இந்த பதினோரு கூட்டணி கட்சிகளும், அதிபர் கோட்டபய ராஜபக்ஷவிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளை இணைத்துக் கொண்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.