IPL  live score: பந்துவீச்சில் மிரட்டும் கொல்கத்தா; தொடர் விக்கெட் சரிவில் பஞ்சாப்!

IPL 2022, KKR vs PBKS live score updates in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி தரப்பில் ஆண்ட்ரே ரசல் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதேவேளையில், பெங்களூரு உடனான முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. பெங்களூரு அணி 205 ரன்களை குவித்த போதிலும், 19வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது பஞ்சாப். அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், தொடக்க வீரர் ஷிகர் தவான், பானுகா ராஜபக்ச, லியாம் லிவிங்ஸ்டன், ஷாரு கான், ஒடியன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும், வலுவான பந்துவீச்சு தாக்குலை வைத்துள்ள அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இணைத்துள்ளது கூடுதல் பலம் தரும்.

கொல்கத்தா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஒரு வெற்றியுடன் பஞ்சாப் அணி 3வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றியை சுவைக்கும் அணி பட்டியலில் முன்னேற்றம் காணும் என்பதால், இன்றை ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   01 April 2022

Kolkata Knight Riders 

vs

Punjab Kings   104/8 (16.0)

BowlersORWKT
Umesh Yadav4234
Varun Chakaravarthy *4140
BatsmanRB
Odean Smith3 7
Kagiso Rabada *1 7

Play In Progress ( Day – Match 8 ) Kolkata Knight Riders elected to field

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
20:22 (IST) 1 Apr 2022
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; அதிரடியை தொடரும் பஞ்சாப்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போதுவரை 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 78 ரன்களை சேர்த்துள்ளது.

20:10 (IST) 1 Apr 2022
பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை சேர்த்துள்ளது.

19:36 (IST) 1 Apr 2022
கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19:32 (IST) 1 Apr 2022
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

19:15 (IST) 1 Apr 2022
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்!

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.

19:13 (IST) 1 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்!

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

19:05 (IST) 1 Apr 2022
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு; பஞ்சாப் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.

18:52 (IST) 1 Apr 2022
ஹெட் டு ஹெட் ரெக்கார்ட்ஸ்: கேகேஆர் vs பிபிகேஎஸ் – நேருக்கு நேர்!

ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக 29 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் விளையாடிய போட்டி: 23 (கேகேஆர் 17, பிபிகேஎஸ் 6)

இந்தியாவுக்கு வெளியே விளையாடிய போட்டிகள்: 5 (கேகேஆர் 2, பிபிகேஎஸ் 3)

கேகேஆர் vs பிபிகேஎஸ் இடையேயான ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் கௌதம் கம்பீர்- 492

கேகேஆர் vs பிபிகேஎஸ் இடையேயான ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் – சுனில் நரைன் -31

கடைசியாக நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா 3ல் வெற்றி, பஞ்சாப் 2ல் வெற்றி.

வான்கடே மைதானத்தில் இவ்விரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

18:45 (IST) 1 Apr 2022
வான்கடே எப்படி?

வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் எப்போதும் பேட்டிங்கிற்கு சிறந்தது. ஆனால், சற்று பவுன்ஸ் இருக்கும். அதேவேளையில், குறுகிய பவுண்டரிகள் பேட்டர்களுக்கு கூடுதல் ரன் சேர்க்க உதவும்.

இங்கு மிகப்பெரிய பின்னடைவு பனிப்பொழிவு தான். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே நினைக்கும். தொடரில் இதுவரை நடந்த 7 போட்டிகளில் டாஸ் வென்ற அணியே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

18:35 (IST) 1 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

18:35 (IST) 1 Apr 2022
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ராஜ் அங்கத் பாவா, ஒடியன் ஸ்மித், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா.

18:35 (IST) 1 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அசோக் ஷர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் சக்கரவர்த்தி, வருண் சக்கரவர்த்தி, ஏ. கான், ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்.

18:22 (IST) 1 Apr 2022
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

ஷிகர் தவான், மயங்க் அகர்வால்(கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா தவான், பிரேரக் மன்காட், வைபவ் அரோரா, ரிட்டிக் சட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.

18:21 (IST) 1 Apr 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.