Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107. 45 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 97.52 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 24 சுங்கச்சாவடிகளில், 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
IPL 2022: ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா – 50, ஷிவம் தூபே – 49 ரன்கள் எடுத்தனர். 211 ரன்கள் இலக்கை நோக்கை ஆடிய லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அடுத்து, மும்பையில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.
Tamil News LIVE Updates:
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 268.50 உயர்ந்து ரூ. 2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 965.50க்கு விற்பனையாகிறது.
Sri Lanka Crisis: இலங்கை, கொழும்பில் நேற்று (மார்ச் 31)ஏற்பட்ட வன்முறையில் இராணுவ வண்டி தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. அதிபர் ராஜபக்ஸே வீடு முற்றுகை இடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Mk Stalin Delhi Visit: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார். அடுத்ததாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். அங்கு அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து ஸ்டாலின் பார்வையிடுகிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அரசு விரைவுப் பேருந்துகளில், பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏசி மற்றும் நான் ஏசி பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும். பேருந்து புறப்படும்வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நாட்டிலேயே முதல் மாநிலமாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மகாராஷ்டிரா அரசு நீக்கியது. மேற்குவங்கத்தில் கட்டாய முகக்கவசத்தை தவிர அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இறுதி வரை போராடுவேன். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கொள்வேன் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியுடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது. 3 மாதங்களுக்கு மாஸ்க் அணியவும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்துவதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.