தமிழ்நாட்டைத் தேடி அடுத்தடுத்து பல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனம் நிலையில் தற்போது அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மென்பொருள் நிறுவனம் சென்னையில் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறந்துள்ளது
3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!
சமீபத்தில் பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சென்னையில் சுமார் 1 மில்லியன் சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ZoomInfo ஜூன் 2021ல் சென்னையில் இயங்கி வந்த Insent.ai நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள், வர்த்தகம் அனைத்தையும் ZoomInfo கைப்பற்றியது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் ஊழியர்கள் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரித்துச் சுமார் 70 ஊழியர்கள் உடன் சென்னையில் புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது ZoomInfo.
மேலும் இன்று முக்கியமான பிற செய்திகளை இப்போது பார்ப்போம்.
ஜிஎஸ்டி கலெக்ஷன்
மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 2022 இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,42,095 கோடி ரூபாயில் இதில் சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.74,470 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.39,131 கோடி உட்பட), செஸ் மூலம் 9417 கோடி ரூபாய் (பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ. 981 கோடி உட்பட).
ஐரோப்பிய பணவீக்கம்
உக்ரைன் – ரஷ்யா போர் மூலம் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் உணவு பொருட்களில் இருந்து அனைத்து நுகர்வு சந்தை பொருட்கள் வரையில் பணவீக்கம் 7.5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.9 சதவீதம் என்ற வரலாறு உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட்
2015க்குப் பின் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வீடு விற்பனை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் 7 பெரும் நகரங்களில் மட்டும் சுமார் 99550 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு 58,290 வீடுகளாக இருந்த நிலையில் தற்போது 71 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது என Anarock நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி இந்தியா (எம்எஸ்ஐ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் வரலாறு காணாத ஏற்றுமதியைப் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் சுமார் 2,38,376 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மார்ச் 2022 இல் மட்டும் 26,496 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்தி வரலாற்று உச்ச அளவை பதிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி 1986 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதுவரையில் 22.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
மார்ச் ஏற்றுமதி
மார்ச் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அளவு புதிய உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி அளவு 40.38 பில்லியன் டாலரை தொட்டது, அதே நேரத்தில் இறக்குமதி அளவு 59.07 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என அரசின் வர்த்தகத் தரவுகள் கூறுகிறது. இதன் மூலம் மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 18.69 பில்லியன் டாலராக உள்ளது.
இதோடு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021 – 22 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த ஏற்றுமதி அளவு 417.81 பில்லியன் டாலரைத் தொட்ட நிலையில் இறக்குமதி அளவு 610.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ZoomInfo first India office in Chennai, GST collection all-time high in March, Maruti Suzuki exports record
ZoomInfo first India office in Chennai, GST collection all-time high in March, Maruti Suzuki exports record TOP Headlines: சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்.. அடிசக்க..!