கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர மினிட்மேன்வகை ஏவுகணை சோதனையை அமெரிக்கா ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி சோதனையை ரத்து செய்ததாக அமெரிக்க விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி ஏவுகணை சோதனையை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், அதிபர் புதின் அணுசக்தி அவசர நிலையை அறிவித்ததை அடுத்து தற்காலிகமாக ரத்து செய்தது.
அணு ஆயுத பதற்றத்தை தீர்க்கவே சோதனையை தாமதப்படுத்தி உள்ளதாகவும் அதற்காக ரத்து செய்ததாக காரணமில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க விமானப் படை செய்தி தொடர்பாளர் Ann Stefanek, சோதனை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.