இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க இணையதளங்களையும் அந்நாட்டு அரசு கண்காணிக்கத் தொடங்கி உள்ளது.
கடும் பொருளாதர நெருக்கடியை அடுத்து, அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. போரட்டத்தில் வன்முறை தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, இலங்கை அரசு, போராட்டங்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதில் ஒரு அம்சமாக இணையதளங்களில் வாயிலாக மக்கள் ஒருங்கிணைப்போர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக திஸர அனுருத்த பண்டார என்னும் சமூக செயற்பாட்டாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக செயற்பாட்டாளர் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இதனை விசாரிக்க குழு ஒன்றை நியமித்துள்ளதாக கூறியுள்ளது.