ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் காஜல் இன்றியமையாதது. எவ்வளவு மேக்கப் போட்டும், கண்களில் மை போடவில்லை என்றால், அந்த மேக்கப் முழுமையடையாது. அதேபோல மேக்கப் விரும்பாத பெண்கள் கூட, காஜல் மட்டும் அணிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் உண்மைதான். கண்களுக்கு காஜல் அணிவது, கண்களை எடுப்பாக காட்டுவதுடன், உங்கள் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
ஆனால் பெரும்பாலும் சந்தையில் கிடைக்கும் காஜல் ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது கண்களில் போடும் போது, சில நேரங்களில் கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர் வடியலாம். இயற்கையான காஜல் உங்களுக்கு வேண்டுமா?
எந்த ரசாயனங்களும் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி, நீங்களே எளிதாக காஜல் தயாரிக்கலாம்.
உங்களுக்கு தேவையானது
பாதாம் – 4-5
கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய்
ட்வீசர்
ஒரு தட்டு
ஒரு பீங்கான் கிண்ணம்
செயல்முறை
* ட்வீசரைப் பயன்படுத்தி, பாதாம் பருப்பை வாயுச் சுடருக்கு அருகில் தள்ளவும்.
* சுமார் 10 நிமிடங்கள் அல்லது அது கிரிஸ்ப் ஆகும் வரை தொடர்ந்து எரிக்கவும்.
* இப்போது வறுத்த பாதாம் பேஸ்ட்டை உருவாக்கவும்.
* முற்றிலும் மென்மையாகும் வரை கலக்கவும்.
* புதிய கற்றாழை ஒரு துண்டு எடுத்து ஜெல்லை பிழியவும்.
* அதன் பிறகு, பாதாம் தூளை கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
* தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு சூடாக்குவது, மென்மையான பேஸ்ட்டை உருவாக்க உதவுகிறது.
* நீங்கள் இப்போது காஜலை ஒரு காற்று புகாத கன்டெய்னரில் சேமித்து, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உதவிக்குறிப்பு: தடவுவதற்கு முன், டால்கம் பவுடரைக் கொண்டு உங்கள் கண்களைத் துடைக்கவும். உங்கள் உள் கண் இமைகளில் அதிகமாக காஜலை பயன்படுத்த வேண்டாம். பாதாம் காஜல் கண் இமைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் பார்வையை மேம்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“