திருமலை: ஆந்திரா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதோடு, அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல், பள்ளி செல்லும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி வரும் 4ம் தேதி (திங்கள்) முதல் பள்ளிகள் காலை 7.30 முதல் 11.30 வரை அரை நாள் மட்டுமே திறக்கப்படும். மேலும், வரும் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகளும், அடுத்த மாதம் (மே மாதம்) 6ம் தேதி முதல் இன்டர்மீடியட் (பிளஸ் 2) தேர்வுகளும் நடைபெறுமென ஆந்திர மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார்.