திமிராக உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா, உக்ரைனிடம் இதுவரை 142 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள் மற்றும் 625 tankகளை இழந்துள்ளது.
இப்போது ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பிரச்சினை என்னவென்றால், அதனிடம் ஆயுதங்கள் காலியாகிவருகின்றனவாம்.
அத்துடன், ரஷ்யாவின் சில ஹெலிகொப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை அல்லது உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டவை.
இந்த தகவலை பிரித்தானிய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களின் பெருமளவிலான பாகங்கள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை என்று கூறியுள்ள அவர், ரஷ்யாவால் அவற்றை தயாரிக்கவோ இறக்குமதி செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மற்ற நாடுகள் பல ரஷ்யா மீது தடைகள் விதித்துள்ளதால், ரஷ்யாவால் ஆயுதங்களையோ, ஆயுதங்களின் உதிரி பாகங்களையோ இறக்குமதி செய்யவும் முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக, ஆழம் தெரியாமல் உக்ரைனில் காலை விட்ட ரஷ்யா, இப்போது விழி பிதுங்கிப்போய் நிற்கிறது.
சோவியத் யூனியனாக இருந்தபோது நாட்டின் ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களில் 30 சதவிகிதத்தை உக்ரைன்தான் தயாரித்து வந்தது.
சோவியத் யூனியன் உடைந்த பின்னரும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆயுத விற்பனை தொடர்ந்தாலும், 2014இல் ரஷ்யா கிரிமியாவை ஊடுருவியதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆயுத விற்பனையை பெருமளவில் குறைத்துவிட்டது உக்ரைன்.
ஆகவே, உக்ரைனுடன் தேவையில்லாமல் முட்டிக்கொண்டதால், இப்போது ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பழுதான ஆயுதங்களை சரி செய்யவும் உதிரி பாகங்கள் இல்லாமல் ரஷ்யா திகைத்துப் போயிருப்பதகாவும், மீண்டும் ஆயுதங்களையும் படைவீரர்களையும் திரட்டுவதற்காகவே உக்ரைனிலிருந்து பின்வாங்குவது போல் காட்டிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.