இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை புலம்பெயர் அமைப்புகள் மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா, பிரித்தானியா, மற்றும் அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்த நிலையில் முதலீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்று புலம்பெயர் அமைப்புகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.