உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை அண்டை நாடான பெலாரஸில் ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 38வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ரஷ்யா படைகள் உக்ரைனில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக உக்ரேனிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பனை செய்து வருவதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் கடைகள் வணிகங்கள் மீண்டும் திறப்பு!
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குநரகம் கூறியதாவது, பெலராஸ் நகரமான Naroulia-வில் ரஷ்ய துருப்புகள் திறந்தவெளி சந்தை அமைத்துள்ளனர்.
அங்கு உக்ரைனிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், கார்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.