உக்ரைன் துணை பிரதமரின் கணவர் படுகொலை!



 ரஷ்ய நடத்திய தாக்குதலில் உக்ரைன் துணை பிரதமரின் கணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் துணை பிரதமர் Olga Stefanyshyna-ன் கணவர் Bogdan கொல்லப்பட்டதை எம்.பி. Lesia Vasylenko உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து Lesia Vasylenko ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த 36 நாட்கள் போரில் எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று கூடுதலாக அழுதேன்.

எனது சக எம்.பி. Olga Stefanyshyna-ன் கணவர் கொல்லப்பட்டார்.

Chernihiv நகரலிருந்து மக்களை வெளியேற்ற முயன்ற போது, அவர் ஹீரோவாக இறந்தார்.

நினைத்துப் பார்க்க முடியாத சோகம் இது என Lesia Vasylenko தெரிவித்துள்ளார்.

Chernihiv நகரலிருந்து மக்களை வெளியேற்ற முயன்ற போது, ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் Bogdan உட்பட தன்னார்வலர்கள் பலர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பிரித்தானியா ஏவுகணை! வெளியான வீடியோ ஆதாரம் 

சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதல்களை முற்றிலும் நிறுத்துவதாக ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் உறுதியளித்தனர்.

ஆனால், ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களின் வாக்குறுதியை மதிக்காமல் களத்தில் உள்ள ரஷ்ய படையினர் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.