என்னைக் கொல்லை சதி நடக்கிறது. இதுதொடர்பாக உறுதியான தகவல் எனக்கு வந்துள்ளது. ஆனால் எனது போராட்டத்தில் நான் உறுதியாக இருப்பேன் என்று
பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்,
இம்ரான் கான்
அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆனால் ஏற்கனவே இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை அவர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த நிலையில், இம்ரான் கான் ஏஆர்ஒய் செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆனால் நான் அதற்காக பயப்படவில்லை. சுதந்திரமான, ஜனநாயக பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன். ராணுவம் எனக்கு 3 ஆப்ஷன்களைக் கொடுத்துள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வது, முன்கூட்டியே தேர்தல் அல்லது ராஜினாமா..
டெல்லி.. பஞ்சாப்.. அடுத்த பர்னிச்சர் “குஜராத்”.. களத்தில் குதிக்கும் கெஜ்ரிவால், பகவந்த் மான்!
எனது வாழ்க்கை மட்டும் இப்போது கேள்விக்குரியதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளின் கைப்பாவையாக மாறியுள்ள எதிர்க்கட்சிகள் எனது கேரக்டரையும் சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளன. என்னை மட்டுமல்ல, எனது மனைவியின் கேரக்டரையும் சிதைக்க முயற்சிக்கிறார்கள்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் நான் வெற்றி பெற்றால், எதிர்க்கட்சிகளுடன் பேசுவதை விட, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். தேர்தலை சந்திக்கும்போது எனக்கு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள். அப்போதுதான் எனது கொள்கையிலிருந்து நான் வழுவாமல் இருக்க முடியும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்வேன்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒரு சதியாகும். இது குறித்து எனக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெரியும். சில எதிர்க்கட்சித் தலைவர்கள், சில வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சென்று வந்ததை நான் அறிவேன். ஹுசேன் ஹக்கானி போன்றோர், லண்டனுக்குப் போய் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றிய இம்ரான் கான், ஒரு சக்தி வாய்ந்த வெளிநாடு தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதற்கிடையே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இம்ரான் கான் கூறியிருப்பதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த செய்திவிரைவில் மூன்றாம் உலகப்போர்… நாஸ்டர்டாமஸ் கணிப்பால் உலக மக்கள் அச்சம்!