ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் அதற்கு ஒரு காரணம் என்றும் ஐசிஎம்ஆர் அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு வகை தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோருக்குச் சிறப்பான எதிர்ப்பாற்றல் உள்ளது அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இன்னும் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.