ஒரு கிலோ எலுமிச்சம் பழம் 200 ரூபாய்க்கு விற்பனை| Dinamalar

ராஜ்கோட்:குஜராத்தில், 1 கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜ்கோட் மாவட்டத்தில், அதிக தேவை இருப்பதாலும், வரத்து குறைந்து உள்ளதாலும், எலுமிச்சம் பழங்களின் விலை அதிகரித்துஉள்ளது.ஒரு கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து, ஹிமான்ஷு என்ற நுகர்வோர் கூறியதாவது:பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன. எனினும், எலுமிச்சம் பழங்களைப் போல், எதன் விலையும் இவ்வளவு உயரவில்லை. மேலும், 50 – 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ எலுமிச்சம் பழங்கள், இப்போது, 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதனால் நடுத்தர மக்களுக்கு தான் பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் எலுமிச்சம் பழரசம் அதிகம் அருந்துகின்றனர். இந்நிலையில், அதன் விலை உயர்வு, மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.