கடைசியில் பிச்சைக்காரனாகத்தான் வேண்டும்! – வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரம் 1-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக “அதிகரிக்கும் சுங்கச்சாவடி கட்டணங்கள்… Toll road மக்களுக்கு பயனா… அல்லது சுமையா?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Er.M.SenthilKumar
ஒரு வாகனம் புதிதாக வாங்கும்போதே அதற்கு சாலை வரி செலுத்துகிறோம். சுங்கச்சாவடி விவகாரத்தில், உதாரணமாக, புறவழிச்சாலை அமைக்க ₹ 100 கோடி அரசு செலவிட்டால், அதன்மூலம் தனியார் முதலாளிகள் ₹ 1000+ கோடி லாபம் ஈட்டுகின்றனர். தொடர் பகல் கொள்ளை நடக்கிறது. மக்களுக்கு பயன் அல்ல. பெரும் சுமையே.
விருதுநகர் குணசேகரன் புஷ்பராஜ்
பயன்தருகிறது ! ஆனால் பராமரிப்பு என்ற பெயரில் வரம்பற்ற வசூல் நடக்கிறது. சரியான கட்டண நிர்ணயம் வேண்டும், அதுபோக டெண்டர் எவ்வளவு என்று வெளிப்படையாக இருக்க வேண்டும்…
manivannan
எரிபொருள் விலை உயர்வு
அனைத்து பொருட்களின் விலை உயர்வு
சுங்கச்சாவடி கட்டண விலை மிக மிக உயர்வு
திருவிழாவாக கொண்டாடுங்கள் மக்களே
image
g_v_raghu_vpm
நாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் எங்கள் மாதச் சம்பளம் உயரப் போவதில்லை அல்லது விலைவாசி ஏறுகிறது என்று அவர்களும் உயர்த்தப் போவதில்லை விலைவாசி மற்றும் கூடிக் கொண்டே சென்றால் கடைசியில் பிச்சைக்காரனாக தான் வேண்டும் பொது மக்களின் நிலைமை
Nellai D Muthuselvam
எந்த வகையில் பலன் அளிக்கிறது என்பதை அரசு தான் விளக்கம் தர வேண்டும்.
சாலைகள் வந்தால் தொழிற்சாலைகள் வரும் வாழ்க்கை தரம் உயரும் என்றார்கள்.
அரை ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் தான் உயர்கிறது வாழ்க்கை உயரவில்லை.
இடைநில்லா பேருந்துகள் இயக்கத்தால் பல சிற்றூர்களில் பேருந்து நிற்பது கூட இல்லை.
pragathes_official
சுங்க கட்டணம் உயர்வு; ஆனா சாலை சரி இல்லை(சான்று= ஈரோடு கோவை 6 வழி சாலை). கேஸ் விலை உயர்வு ஆனா subsides வரது இல்லை. கேட்ட சரியான தகவல் இல்லை. booking agency மாற்றம் பன்ன 1008 procedures அலய விடுறாங்க. அமைச்சர் Piyush Goyal மட்டும் ஹைட்ரஜன் வண்டில போவாரு. ஆனா அது இந்தியாவிலே எங்க விக்கராங்கனே தெரியல. மாதம் சம்பளம் ₹10000 .இதுல வேலை நேரம் 12 மணி நேரம் உயர்த்திடாங்க. இத எல்லா கேட்ட நாங்க பண்ணல; காங்கிரஸ் பண்ணதுனு சொல்லராங்க, அவங்க சரி இல்லைனு தான் மக்கள் உங்கள ஆட்சில உக்கார வெச்சாங்க. அதையே நா இன்னும் அதிகமா பன்னுவனு சொன்ன அப்பறம் நீங்க மட்டும் எதுக்கு இதுக்கு ஆட்சி? அந்த English காரன் கிட்டையே இருந்து இருக்கலாம் போல.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.