சனீஸ்வரர் கோவிலில் திரண்ட பக்தர்கள்| Dinamalar

காரைக்கால்:காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில், தெலுங்கு வருட பிறப்பை யொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாரில், பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அதிகாலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. பக்தர்கள் நளன் குளத்தில் நீராடி, சனீஸ்வர பகவானை தரிசித்தனர்.கூட்டம் அதிகளவில் இருந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி., கவுஹால் நிதின் ரமேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.