சாரதி அனுமதிப்பத்திரங்களின் அனுமதி காலத்தை நீடிக்கப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் அனுமதி காலத்தை நீடித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (31) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதற்கமைவாக, நேற்று தொடக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிறைவடையும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் அனுமதி காலம், ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் அனுமதி காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

http://documents.gov.lk/files/egz/2022/3/2273-76_T.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.