புதுடில்லி : ”அரசியல் தலைமைகள் மாறலாம்; ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்,” என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.
டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சமீபகாலமாக சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதற்கு சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் தான் காரணம். அரசியல் தலைமைகளுடன் உள்ள நெருக்கத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைவிட வேண்டும். ஏனெனில் அரசியல் தலைமைகள் மாறலாம். ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளை, ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளால், போலீஸ் மீதான மதிப்பு சீரழிந்துவிட்டது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார், நேர்மையை கடைப்பிடித்து, மக்கள் சேவையில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி : ”அரசியல் தலைமைகள் மாறலாம்; ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்,” என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.