தொடர் அலைச்சல் காரணமாகவே சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கப்பட்டார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!
வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.
தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். முழு உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு, வீடு திரும்பினார்!
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) April 2, 2022
பின்னர் சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய சீமான் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!
வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.
இதன் காரணமாகவே காரணமாகவே மயக்கம் ஏற்பட்டது.
தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். முழு உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு, வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.