சென்னிமலையில் உள்ள பள்ளக்காடு புதூரை சேர்ந்த அருண்குமார் (வயது 22) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 22) என்பவர் எம்சிஏ பட்டதாரி. இவர் வேலை தேடி ஈரோடு வந்தார் இதனைத்தொடர்ந்து ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார்.
அதே நிறுவனத்துக்கு நேர்முகத் தேர்வுக்காக அருண்குமாரும் வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில், இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து சென்னிமலையில் உள்ள ஊத்துக்குளி ரோடு அய்யம் பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இருவர்களின் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிய வந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இருவரும் சென்னிமலை போலீஸ் நிலையத்தை சென்றடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்த நிலையில் உமா மகேஸ்வரியின் பெற்றோர்கள் வரவில்லை. மேலும் போலீசார்கள் அருண்குமார் பெற்றோரிடம் சமாதானம் பேசினார்கள்.
பிறகு அருண்குமாரின் பெற்றோர்கள் அவர்களை அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்தார்கள். புதுமண தம்பதியினர் அருண்குமாரின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.