‘சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன’ என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை விமர்சித்துள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,
”சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.
<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது,(1/2)</p>— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) <a href=”https://twitter.com/EPSTamilNadu/status/1510087786476363779?ref_src=twsrc%5Etfw”>April 2, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொத்து வரி உயர்வு ஏன்? – தமிழ்நாடு அரசு விளக்கம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM