சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களை அதிக அளவில் பாதிக்கும் என்பதால், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்தும் வரும் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.