தமிழக காவல்துறை அனைத்து தரப்பு அதிகாரிகளும் கடந்த காலங்களில் போதைப் பொருள் புழக்கத்தை முறியடித்துள்ளனர். இப்போது, போதைப்பொருள் நுண்ணறிவுப் பீரோ- குற்றப் புலனாய்வுத் துறை (NIB-CID) போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அதன் போரில், டக்கர் பாண்டி மற்றும் டிஜே ரேவ் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களை பயன்படுத்துகிறது.
என்ஐபி-சிஐடி தயாரித்த அந்த 40 நொடி வீடியோவில் போதைப்பொருளில் இருந்து விலகி இருக்க, மக்களை ஈர்க்கும் வகையில் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் வசனங்களை பாண்டி வாய்விட்டு பேசும்.
அதே வேளையில், போதைப்பொருள் மாஃபியாக்களை வேட்டையாடிய திரைப்பட ஹீரோக்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி ரேவ் குறிப்பாக இளைஞர்களிடம் பேசும்.
“நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்று பாண்டி பேசுவது’ பார்ப்பவர்களுக்கு ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக்கை நினைவூட்டுகிறது. “அதேபோல், ஒருமுறை போதைப்பொருள் பயன்படுத்தினால், 100 ஆண்டுகால வாழ்வு தொலைந்துபோகும். எனவே, போதைப்பொருளை தவிர்த்து, 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழுங்கள்,” என, தன் கண்ணாடியை அசைத்தபடி பாண்டி கூறுகிறது.
பாண்டி மஞ்சள் நிற சட்டையும் வேஷ்டியும் அணிந்திருக்கும் போது, ரேவ் கூந்தலுடனும், காதுகள் மற்றும் புருவங்களில் கம்மல் அணிந்தபடி பங்க் லுக்கில் இருக்கிறது.
“விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் என்ன பொதுவானது” அது நயன்தாரா இல்லை; பிரகாஷ் ராஜ் இல்லை; இந்த இரண்டு ஹீரோக்களும் போதை மருந்து மாஃபியாக்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். போதைக்கு எதிரான போரில் சேருங்கள்.” என்று ரேவ் இளைஞர்களிடம் கூறுகிறது. “
என்ஐபி-சிஐடி குழு அனிமேஷன் நிபுணர்கள் மற்றும் ஒரு சமூக ஊடக குழுவுடன் இணைந்து, ஃபிலிம் ஐகான்களைப் பயன்படுத்தி சக்திவாய்ந்த செய்திகளுடன் கூடிய ஷார்ட் வீடியோக்களை உருவாக்குகிறது.
“நாங்கள் போதை வியாபாரிகளை ஒடுக்கி வருகிறோம், அதற்கு இந்த கதாபாத்திரங்கள் உதவும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த விஷயத்தில் சில மீம்ஸ்கள் தவிர, அடிக்கடி வீடியோக்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வால் கூறினார்.
என்ஐபி-சிஐடி எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபால், போதைப்பொருள் பயன்பாடு ஒரு அமைதியான தொற்றுநோய் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“