வாஷிங்டன் : உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 59 நுழைந்துள்ளார். துறைமுகம், சுரங்கம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.
இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தாண்டில் மட்டும், 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து இவரின் மொத்த சொத்து, 3.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக அவர் உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ‘டெஸ்லா’ குழுமத் தலைவர் எலன் மஸ்க், இரண்டாவது இடத்தில் அமேசான் குழுமத் தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெருங்கோடீஸ்வரர் என்ற சிறப்பை கவுதம் அதானி பெற்றார். தற்போது, உலகின் முதல், 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக, புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement