இரண்டு அயலவர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக, 2021 ஜூன் மாத இறுதியில், நுரைச்சோலை, பனியடியில் உள்ள ஒரு நபரை இராணுவ அதிகாரி ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை இராணுவத்தின் கெப்டன் நிலை அதிகாரியொருவரை 2022 மார்ச் 30 ஆம் திகதியிலிருந்து இராணுவ நீதிபதி குழு சேவையிலிருந்து நீக்கியுள்ளது.
2021 ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடவடிக்கைகளுக்கமைவாக , 22 வது விஜயபாகு காலாட் படையணியை சேர்ந்த கெப்டன் ஓமட்டகே நிஷாந்த மதுசங்க பெரேரா அவர்கள் பனியடியில் உள்ள குறித்த தனிநபர் கடத்தப்பட்டதற்கான அறிவுறுத்தல்களை அனுப்பியமைக்கு முழுப்பொறுப்பு மற்றும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இராணுவ உறுப்பினர்களின் தலையீடு மற்றும் 2021 ஜூன் 30 ஆம் திகதி இராணுவ வீரரின் அடுத்தடுத்த கைதினை கேள்வியுற்ற பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், நுரைச்சோலை பொலிஸ் விசாரணைகளுக்கு உதவும் முகமாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு குழுவை அனுப்பி சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். சிவில் சட்டத்திற்கு முழுமையாக இணங்க, நடவடிக்கை எடுப்பதற்காக சில நாட்களுக்குள் இராணுவத்தின் கெப்டன் உட்பட சந்தேகத்திற்குரிய அனைத்து இராணுவ வீரர்களையும் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்தது.
இராணுவச் சட்டத்தின் விதிகள் எண்: 1949 இன் 17, இற்கு அமைவாக, இராணுவத்தின் நீதிபதி அட்வகேட் ஜெனரல் உட்பட நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய இராணுவ நீதிபதி குழு , பிரிவு 129 (1) இன் கீழ் ‘சேவையின் போது இராணுவ ஒழுக்கத்திற்கு துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக’ இராணுவ அதிகாரியான கெப்டனுக்கு எதிராக 2021 டிசம்பர் 27 ஆம் திகதி கூட்டப்பட்டதுடன் அதன் விசாரணைகள் 2022 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்தன.
இராணுவ நீதிபதி குழு, சம்பந்தப்பட்ட கெப்டன் தண்டனைக்குரிய குற்றச்சாட்டில் குற்றவாளி என்று ஏகமனதாக முடிவு செய்தது. மேலும் இராணுவ நீதிமன்ற குழுவின் ஒருமித்த தீர்ப்பு 2022 மார்ச் 30 ஆம் திகதி இராணுவத் தளபதியினால் உறுதிசெய்யப்பட்டது.
அதேபோன்று, மேற்படி செயலில் படையினர் ஈடுபட்டமைக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.