தமது உயிருக்கு ஆபத்து உள்ள போதும் தொடர்ந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
தம்மை அரசு அதிகாரத்தில் இருந்து நீக்க வெளிநாடு ஒன்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர் இந்த சதித்திட்டத்தில் எதிர்க்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.
தம்மை விட்டு ஓடிப் போன கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர் அந்த கட்சிகளின் ஆதரவில் பெரும்பான்மை பலம் பெற்றாலும் ஆட்சி நடத்த முடியாது என்றார்.
இதை விட தேர்தலை நடத்தினால் யாருக்கு எந்த இடம் என்று தெளிவாகி விடும் என்றும் இம்ரான் கான் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் இப்போதே அமைச்சர் பதவிகளை பங்கு பிரிப்பதில் குறியாக இருப்பதாகவும் இம்ரான் கான் விமர்சித்தார்.