புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக டில்லி வந்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தருவதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் போர் தொடுப்பதற்கு முன் நிலவிய விலையிலேயே கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.
இந்தாண்டு, 1.50 கோடி பேரல் கச்சா எண்ணெய் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரஷ்யாவின் ரூபிள் கரன்சிக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.ரஷ்ய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.