டெல்லி: நகர்ப்புறங்களில் குப்பைக் கூளங்களாக சேர்ந்திடும் திடக் கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்வதற்கும் மின்சக்தி உற்பத்திக்கு வழிவகை செய்வதற்கும் ஏதுவாக ஒரு தனிநபர் மசோதாவை லேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த நிலையில்,பிப்ரவரி 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி மார்ச் 14ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் பொதுச் செயலாளர்களும், நாட்டில் கரோனா 3வது அலையின்போது குறைந்த தொற்று எண்ணிக்கை குறித்தும், விரிவான தடுப்பூசி ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.
இந்த நிலையில். இன்று மக்களவையில் நகர்ப்புறங்களில் குப்பைக் கூளங்களாக சேர்ந்திடும் திடக் கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்வதற்கும் மின்சக்தி உற்பத்திக்கு வழிவகை செய்வதற்கும் ஏதுவாக ஒரு தனிநபர் மசோதாவை லேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். திடக் கழிவுகள், திடக் கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய திடக் கழிவுகளை மின்சார உற்பத்தி செய்திடவும் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை நிலப்பரப்புகளுக்கு கொண்டு செல்லவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்காக திடக்கழிவு மேலாண்மை, 2022 என்ற தனிநபர் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.