உக்ரைனில் நிலவிவரும் பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில், அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தற்போதைய நிலை குறித்தும் அவரது குடும்பத்தின் நிலை குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் 5 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய கொலைப்படைகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக மூன்றில் இருந்து நான்கு நாள்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு பதுங்கு குழிகளில் இருந்து வெளியேற விடுவதாக economist பத்திரிகைக்கு ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து, economist பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதுங்கி இருக்கும் பதுங்குகுழிகள் வான் தடுப்பு தாக்குதல் அமைப்பு கொண்ட ஆயுதம் தாங்கிய சிறப்பு ராணுவ படைகளால் பாதுகாப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, அவர் கடந்த வாரம் முதல் முறையாக ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தான் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரங்கள் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணலில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆம் மற்றும் இல்லை என்ற பதிலையே அவர் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு தான் நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரங்களே உறங்குவதால் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் இதனால் தனது நாள்கள் மிகுந்த குழப்பத்துடனே நகர்கிறது எனவே எனது பதில்களுக்கு மன்னிக்கவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, மரியுபோலில் உள்ள ராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் வாரத்திற்கு ஒருமுறையாவது உரையாடுவதாகவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தொலைக்காட்சிக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அளித்த இந்த பேட்டிக்கு ரஷ்ய அரசு தடை செய்துள்ள நிலையில், ஜனாதிபதியை பேட்டியெடுத்த பத்திரிகையாளர்கள் சிலர் அதனை திருத்தாமல் வெளியிட முன்வந்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியின் நிலைமை பாதுகாப்பு பதுங்கு குழிகள், இரண்டு மணிநேர தூக்கம் என இருக்க, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். மேலும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் அவரது குடும்பத்தை சந்திக்க முடிகிறதா என்பதும் குறித்தும் சரிவர இதுவரை தெரியவில்லை.
எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை மீண்டும் அச்சுறுத்துகிறாரா புடின்!