தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துமவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீநிவாஸ் எனும் 38 வயது மதிக்கத்தக்க இதய நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த அந்த நபரை எலி கடித்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது நிலை மோசமானதை அடுத்து, அவர் நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், ஸ்ரீநிவாசனின் சசோதரர், “மார்ச் 30ம் தேதி அன்று எலி கடித்த சம்பவம் நடந்துள்ளது. என் சகோததரை எலிகள் கடித்தபோது, அவருக்கு மோசமாக ரத்தம் வந்தது. படுக்கை முழுவதும் ரத்தமாக இருந்தது. அதனால் புகார் தெரிவித்தேன்” என்றார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிஜாம்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸின் (நிம்ஸ்) இயக்குனர் டாக்டர் கே மனோகர் கூறியதாவது:-
ஸ்ரீநிவாஸூக்கு நாள்பட்ட மதுப்பழக்கம் இருந்துள்ளது. அவரது கல்லீரல் கணையம் மற்றும் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. வென்டிலேட்டரில் இருந்த அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். நிம்ஸ் செல்லும் வழியில் கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த சிக்கல்களால்தான் மரணம் நிகழ்ந்தது. எலி கடித்ததால் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. பூஸ்டர் போடுவதே உருமாற்ற வைரசை எதிர்க்கும்- மருத்துவ நிபுணர்கள் தகவல்