பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் அவரை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் இம்ரான் கான் உருவாக்கிய குழப்பத்தை சுத்தம் செய்ய நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நிற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இம்ரான் கான் 2018-ல் “நயா பாகிஸ்தானை” உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார், ஆனால் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் உள்ள அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்க அவர் தவறிவிட்டார்.
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்ரான் கான் ஒரு முடிந்துபோன வரலாறு!! நயா பாகிஸ்தான் விட்டுச்சென்ற குழப்பத்தை சுத்தம் செய்வதில் நாம் ஒன்றிணைந்து நிராக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இம்ரான் கான் வியாழக்கிழமை தனது உரையில், கடவுள் அருளால் அவர் தனது வாழ்க்கையில் புகழ், செல்வம் போன்ற அனைத்தையும் அடைந்துவிட்டதால் அவருக்கு எதுவும் தேவையில்லை கூறினார். அதனை சுட்டிக் காட்டிய ரெஹாம் கான், இம்ரான் கானிடம் “புத்திசாலித்தனம் மற்றும் திறமை” எல்லை என கூறினார்.
அதேபோல், இம்ரான் கான் தனது உரையில், தான் குழந்தையாக இருந்தபோது பாகிஸ்தான் மேலே உயர்ந்ததைக் கண்டதாகக் கூறினார். இதற்கும் ரெஹாம் கான் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், “ஆமாம், நீங்கள் பிரதமராக இல்லாத போது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது” என்று சாடியுள்ளார்.
Imran is history!! I think we should focus on standing together for cleaning the mess Naya Pakistan has left. https://t.co/2Bp04ZDbqY
— Reham Khan (@RehamKhan1) April 1, 2022
இம்ரான் கான் தனது பிரதமர் பதிவிலிருந்து விலகவேண்டும் என நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், “கடைசி பந்து வரை நின்று விளையாடுவேன்” என்று கூறி பதவி விலக மறுத்துவிட்டார்.
வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இம்ரான் கான் தனது கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சியை விற்றுவிட்டதாகக் கூறி, தான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறினார்.
Yes Pakistan was great when you were not the PM. #الوداع_سلیکٹڈ_الوداع
— Reham Khan (@RehamKhan1) March 31, 2022
“யாராவது என்னை ராஜினாமா செய்யச் சொன்னால், நான் ராஜினாமா செய்வேனா? நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன், கடைசி பந்து வரை விளையாடுகிறேன். என் வாழ்நாளில் நான் ஒருபோதும் கைவிடவில்லை” என்று இம்ரான் கான் கூறினார். மேலும், வாக்கெடுப்பின் முடிவில் தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இருந்தாலும், தான மீண்டும் வலுவாக எழுந்து நிற்பேன் என கூறியுள்ளார்.