watermelon soup recipe in tamil: கோடையில் நாம் பயணித்து வரும் நிலையில், எப்போதும் உடலில் நீர்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நாம் குளிர்ச்சியான உணவுகள், பழங்கள் மற்றும் பானங்களை தெரிவு செய்து உட்கொள்ளலாம். அந்த வகையில், உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை தரும் ஒரு பழமான தர்பூசணியை கண்டிப்பாக சாப்பிடலாம்.
தர்பூசணியில் உள்ள அற்புத நன்மைகள்:
தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.
இவற்றின் வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.
இந்த நீர்ச்சத்து மிகுந்த பழத்தை அன்றாட, குறிப்பாக கோடைகாலத்தில் உட்கொண்டு வருவதால், சிறுநீரக தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
கோடையில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
இந்த அற்புத பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரிக்கிறது. மேலும், சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.
ரத்த அழுத்தம் உள்ள மக்கள் தர்பூசணி சாப்பிடுவதால் அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தினந்தோறும் காலையில் தர்பூசணி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.
தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் எதிர்ப்பாற்றல் வளருகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
இப்படி ஏரளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள தர்பூசணி பழத்தில் சுவையான சூப் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய தர்பூசணி – 2 கப்
இஞ்சி பூண்டு விழுது – ½ டேபிள்ஸ்பூன்
புதினா – சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் – ¼ டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு
தர்பூசணி சூப் சிம்பிள் செய்முறை :
முதலில் கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுதுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
பிறகு தர்பூசணி மற்றும் புதினாவை மிக்ஸியில் நைசாக அரைத்து, அந்த விழுதை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்க்கவும்.
கலவை நன்றாக கொதித்து கெட்டியாகும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.
இப்போது அடுப்பை அணைத்து சூப்பை கீழே இறக்கவும்.
இந்த சூடான தர்ப்பூசணி சூப்பை பரிமாறும் போது நறுக்கிய புதினாவை தூவி பரிமாறி ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“