லக்னோ: “பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கு அதற்குரிய பணத்தை வழங்க வேண்டும்,” என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்த ஆண்டுக்கான பயிர் கொள்முதல் நேற்று துவங்கியது. இதுகுறித்த உயர் நிலை ஆலோசனைக் கூட்டம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னோவில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, “மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி, ஒரு குவிண்டால் கோதுமை 2,015 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்தில் அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்,”என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உ.பி.,யில் தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து, 383 விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுதும் 4,593 கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
லக்னோ: “பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கு அதற்குரிய பணத்தை வழங்க வேண்டும்,” என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தில், முதல்வர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.