பாகிஸ்தானின் நலனிற்காக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் இம்ரான் கான், தேசத்தின் நலனிற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் மக்கள் போராட வேண்டும் என்றார்.
மேலும், வெளிநாட்டு சதிகாரர்கள் நாட்டின் தலைமையை மாற்றப் பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரிப் ஆட்சியை கைப்பற்றினால், அவர் அமெரிக்காவிற்கு அடிமையாக இருப்பார் என குறிப்பிட்டார்.