Former Cricketer Shoaib Akhtar Share Memories : பாகிஸ்தான் கரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் சோயிப் அக்தர். 90-களில் பாகிஸ்தான் அணியில் கால்பதித்த அவர், தனது அசுரவேக பந்துவீ்ச்சின் மூலம் எதிரணி வீரர்களை நிலைகுலைய வைத்தவர். அப்போதைய உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக சச்சின் தெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்துவீச்சின் மூலம் வீழ்த்திய பெருமைக்குரியவர்.
பந்துவீசுவாதற்காக பவுண்டரி எல்லையில் இருந்து ஓடி வரும் அக்தர் கடந்த 2003-ம் ஆண்டு தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை கிரிககெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி உலகின் அதி வேகமாக பந்துவீச்சிய கிரிக்கெட் வீர என்ற சாதனையை படைத்தார். இன்றுவரை அந்த சாதனையை யாரும் தகர்க்கவில்லை.
இத்தனை பெருமைக்குரிய அக்தர் இந்தியாவுடன் விளையாடும்போது அப்போதைய இந்திய அணியின் முன்னணி வீரர்களாக இருந்த தெண்டுல்கர், சேவாக், கங்குலி. டிராவிட், ஆகியோரை தனது வேகபந்துவீச்சின் மூலம் வீழ்த்தியுள்ளார். அதே சமபயம் பலமுறை இவர்கள் அகதரின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கியுள்ளனர். ஆனாலும் பலமுறை இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றி அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
90-களின் இறுதியில் உலகின் அதிவேக பந்துவீச்சிளர்களில் முன்னணியில் இருந்த அக்தர், இந்திய அணியில் அப்போது விளையாடிய முன்னணி வீரர்கள் பலருக்கும் பெரிய தொல்லையாக இருந்துள்ளார். இத்தனை பேருக்கு அக்தர் தொல்லை கொடுத்திருந்தாலும், அவருக்கே தொல்லை கொடுத்த ஒரு வீரரும் இருக்கிறார். அவர் தான் தமிழகத்தை சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி.
கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றுள்ள அக்தர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து தனியார் இணையத்தில் வர்ணனை செய்து வரும் சோயிப் அக்தர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் யார் என்று ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு அமித் மிஸ்ரா, மக்காயா நிதினி, லட்சுமிபதி பாலாஜி என்ற 3 ஆப்ஷன்களை கொடுத்தார். இதில் அமித் மிஸ்ரா என்று ஹர்பஜன சொல்ல தவறாக பதில் லட்சுமிபதி பாலாஜி என்பது தான் சரியாக பதில் என்று கூறும் அக்தர், இந்தியாவுடன் நடைபெற்ற ஒரு போட்டியில் பாலாஜி தனக்கு எப்படி தொல்லை கொடுத்தார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அக்தர், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் உட்பட இந்தியாவின் முன்னணி வீரர்கள் பலரும் எனது பந்துவீச்சிய்ல ரன் குவிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் பாலாஜி ஒருவர் மட்டும் எனது பந்துவீச்சில் சிக்சர்களாக விளாசினார். லோயர் மிடில்ஆர்டர் வரிசையில் களமிறங்கிய அவர் அதிரடியாக ஆடியது என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கூறியுள்ளர்.
அக்தர் சொன்ன அந்த போட்டி 2004-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடந்தது. கஙகுலி தலைமையில் பாகிஸ்தான் சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், இறுதிகட்டத்தில் பேட்டிங்கில் கலக்கிய பாலாஜி, பாகிஸதான் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அக்தரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி கவனத்தை ஈர்த்தார்.
கடைசியாக 2011-ம்ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் விளையாடிய அக்தர் அதன்பின் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தறபோது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் அவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்களை வீடியோ மூலம் பகிர்ந்து வரும் அக்தர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் குறித்தும் வீடியோ வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“