பிம்ஸ் மருத்துவமனை சார்பில் கண்காணிப்பு கேமரா வழங்கல்| Dinamalar

புதுச்சேரி : பிம்ஸ் மருத்துவமனை சார்பில் காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சி.சி.டிவி., கேமரா மற்றும் பேரிகார்டு வழங்கப்பட்டது..இ.சி.ஆரில் சாலை விபத்தை ஒழுங்குபடுத்த, கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் சி.சி.டிவி., கேமரா மற்றும் பேரிகார்டு வழங்கும் நிகழ்ச்சி காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

பிம்ஸ் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வழங்கிட, கிழக்கு எஸ்.பி., தீபிகா பெற்றுக்கொண்டார்.பிம்ஸ் முதல்வர் ரேணு, பதிவாளர் அனில் பூர்த்தி, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,சப் இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.