சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பாலாஜி, ஹரீஷ்குமார், சல்மான்கானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாதம் பணியாற்ற உத்தரவிட்டது.