ஊட்டி: ஊட்டி அருகே ஏகலைவா அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சோலூர் கோக்கால் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவரின் துப்பட்டாவை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (58) பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஹெச்.எம். பணியில் இருந்து சுப்பிரமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.