மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி இரண்டிலும் தோல்வி அடைந்தது.