இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்தியாவின் நடப்பு நாடான ரஷ்யாவிலும் இன்போசிஸ் அலுவலகத்தைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் பல பிரச்சனைகள் வெடித்த நிலையில், இன்போசிஸ் நிறுவனமும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பெரும் பிரச்சனையை நாராணயமூர்த்திக் குடும்பத்தின் வாயிலாக எதிர்கொண்டது.
இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!
இதனால் இன்போசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் சற்றும் எதிர்பார்க்காத பிரச்சனையை எதிர்கொண்டார்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்-ன் மனைவி அக்ஷதா மூர்த்தி இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் ஓரே மகள் ஆவார். அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 400 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார்.
அக்ஷதா மூர்த்தி
இந்நிலையில் ரிஷி சுனக் ரஷ்யா வர்த்தகத்தில் இருந்து லாபம் பார்த்து வருகிறார், மற்ற நிறுவனங்களுக்குத் தடை விதித்து விட்டு அவர் மட்டும் இன்போசிஸ் மூலம் ரஷ்யாவில் இருந்து லாபத்தைப் பெற்று வருகிறார் எனப் பலர் பல விதிமாக ரிஷி சுனக்-ஐ குற்றம்சாட்டினர்.
விளாடிமிர் புதின்
இந்நிலையில் ரிஷி சுனக், இன்போசிஸ் நிறுவனம் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் மூலம் எவ்விதமான நன்மையும் அடையவில்லை, இதேபோல் எனக்கும் இன்போசிஸ் நிறுவனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என விளக்கம் கொடுத்தார், ஆனாலும் தொடர்ந்து ரிஷி சுனக் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இன்போசிஸ் முடிவு
இந்நிலையில் இன்போசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ளதாகவும், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகப் பிபிசி ரிப்போர்ட் கூறுகிறது. உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பெரிய இந்திய நிறுவனம் இன்போசிஸ்.
Infosys closing Russia office: UK Rishi Sunak, Akshata Murthy facing pressure
Infosys closing Russia office (ரஷ்ய அலுவலகத்தை மூடிய இன்போசிஸ்): இன்போசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ளதாகவும், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகப் பிபிசி ரிப்போர்ட் கூறுகிறது. உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பெரிய இந்திய நிறுவனம் இன்போசிஸ்.