வாடிக்கையாளர்களை கதறவிடும் சாம்சங் – மேலும் ஒரு புதிய 5ஜி போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வாரம் நிறுவனம் நான்கு A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயனர் சந்தையில் அறிமுகம் செய்தது. எதிர்பார்ப்புகளை மீறி தற்போது தனது M சீரிஸ் தொகுப்பில் இருந்து புதிய 5ஜி போனை வெளிக்கொண்டு வந்துள்ளது.

புதிய சாம்சங் போன் 5nm நானோ மீட்டரால் கட்டமைக்கப்பட்ட ஆக்டாகோர் புராசஸர் உடன் வருவதாக சாம்சங் தெரிவித்துள்ளது. எனினும், சிப்செட்டின் பெயரை நிறுவனம் குறிப்பிடவில்லை. வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, இது நிறுவனத்தின்
Samsung Exynos 1280
சிப்செட்டாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமரா அமைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. இதில் முதன்மை சென்சாராக 50MP லென்ஸ் செயல்படுகிறது. கடந்தாண்டு
Samsung Galaxy
M32 ரூ.14,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால் இம்முறை நிறுவனம் தனது புதிய எம்33 5ஜி போனின் தொடக்க விலையை ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்துள்ளது. எனினும் அறிமுக சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வாரத்துக்கு ரெண்டு – Samsung விரும்பிகளுக்கு ஜாக்பாட்!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.6″ இன்ச் FHD+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.
Android
12 அடிப்படையிலான ONE UI 4 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு OS அப்டேட்ஸ் வழங்குவதாக சாம்சங் உறுதியளித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்33 ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் பிரத்யேக Exynos 1280 Soc புராசஸர் உதவியுடன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், NFC, WiFi போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் கேமராவை பொருத்தவரை, 50MP மெகாபிக்சல் F1.8 முதன்மை சென்சார், 5MP F2.2 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மெகாபிக்சல் F2.4 டெப்த் சென்சார், 2MP மெகாபிக்சல் F2.2 மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் F2.2 கேமரா திரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் – Samsung அளிக்கும் உறுதிமொழி!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விலை விவரம்

திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப், அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், USB Type-C ஆகிய இணைப்பு ஆதரவுகளும் இதில் உள்ளது.

புதிய சாம்சங் போனில் 8GB வரை ரேம் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. Virtual RAM ஆதரவுடன் 16GB வரை இதை நீட்டிக்கலாம். ஸ்டோரேஜ் மெமரியாக 128GB வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவுடன் இதனை 1TB வரை நீட்டிக்க முடியும்.

இதன் முதல் விற்பனை Amazon India மற்றும் Samsung India தளத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என்ற அறிமுக தின சலுகை விலையில் விற்பனைக்கு வரும் என சாம்சங் இந்தியா தெரிவித்துள்ளது.

அடுத்த செய்திவாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.