சின்னத்திரை சீரியல்கள் இல்லத்திரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சீரியல்களில் காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் அடுத்த நாள் எபிசோடுகள் நன்றாக இருக்கும் என்று கருதி சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமான உள்ளது.
இதில் ஒரு சில ரசிகர் கூட்டங்கள் சீரியல் சீன்கள் நன்றாக இல்லை என்றால் அடுத்த சில எபிசோடுகளை பார்க்கமாட்டார்கள். ஆனால் சீரியல் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும், நெட்டிசன்கள் சீரியலை பார்த்துவிடுகினறனர் அதை பார்த்து விட்டு அவர்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எவ்வளவு பெரிய சோக காட்சியாக இருந்தாலும். அதை ஜாலியாக சொல்வதில் மீம் கிரியேட்டர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.







சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை விட வலைதளங்களில் உலா வரும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“