வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
வெங்காயம் அதன் அளவு, நிறம், சுவை பொறுத்து பல வகைகளாக காணப்படுகிறது.
வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது.
கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது.
வெங்காயம் சாப்பிடுவதால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் இருக்கவே செய்கின்றது.
இதையும் படிங்க: சிக்கன் மற்றும் மட்டன் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இரத்தப்போக்கு கோளாறுகளை ஏற்படுத்தலாம் வெங்காய சாறு இரத்த உறைதலை குறைத்து இரத்த போக்கை அதிகரிக்கிறது.
இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் போது கவனம் தேவை.
அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வெங்காயச் சாறு சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது அமில ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கலாம்.
ஏற்கனவே நீரிழிவு மருந்துகளை உட்கொண்டிருந்தால் வெங்காயம் சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.